Wednesday 11 September 2013

தமிழர் சிற்பக்கலை



தமிழர் சிற்பக்கலை

இந்துக்கள் காலம் காலமாக வளர்த்து வந்த கலைகளின் உறைவிடங்களாக விளங்குபவை ஆலயங்கள். இந்து ஆலயங்களின் சிற்பக்கலைகள் மூலமாகவே தெய்வீக உணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றன.விக்கிரக ஆராதனை அல்லது உருவ வழிபாடு இந்து மதத்தின் முக்கிய அம்சமாக இருப்பதால் இந்த ஆலயங்களை உருவாக்கிய சிற்பிகள் சிற்பக்கலையின் உன்னத நிலையினை பெற்றுள்ளனர்.சிற்ப வடிவுள்ள இறைவனின் திருவுருவங்களை திருக்கோயில்களில் தெய்வீகப் பொலிவு பெற்று விளங்கச் செய்பவன் சிவாச்சாரியார். மந்திரம், கிரியை, பாவனை ஆகிய அம்சங்களால் சிற்பியின் கலைப்படைப்புக்கள் தெய்வீக பொலிவு பெற்று வழிபாட்டிற்குரியனவாகின்றன. இந்நிலையில் சிற்பக்கலைஞனும் சிவாச்சாரியாரும் ஆகமங்கள் வகுத்துக் கூறும் நெறி நின்று சமயப்பணி புரிவதில் மக்கியத்தவம் பெற்றன. இவ்விருவரது கைவண்ணத்தால் சிற்பக்கலை இந்து மதத்தில் இரண்டறக்கலப்பது போல வேறு எந்த மதத்திலும் நாம் காண்பது அரிது இந்துக் கலையை பொறுத்தவரையில் கலையில் தெய்வீகத்தையும் தெய்வீகத்தில் கலையையும் கண்டு வழிபட்டவர்களாவர். இதன்காரணமாக இந்துக்களது சமய உணர்வோடு கலையுணர்வும் சேர்ந்து வளர்ச்சி பெற்றது. 
           நிற்பக்கலை என்று கூறுமிடத்து அவற்றுள் விக்கிரகக் கலையும் அடங்கும் விக்கிரகம் என்ற சொல் வி + கிரகம் என பிரிக்கத்தக்கது. வி என்பது மேலாக கிரகம் என்பது பற்றுதல் என்றும் பொருள்படும். அழகிப்பதற்கு உறுதுணையாக இருப்பதோடு அவனது பெருமையை உணர்த்தும் கருவிகளாக அமைகின்றன. படைத்தல், காத்தல் அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை இறைவன் திகழ்த்தகின்றான் என புராணங்கள் கூறுகின்றன. புராணங்கள் சித்திரிக்கும் இறைவனின் புறத்தோற்றத்தை கட்புலனாகும் வண்ணம் சிற்பங்கள் உருவாகின்றன. கோயில் விமானங்களிலும் தூண்களிலும் தெய்வத்திரமேனிகள் சிற்ப சாஸ்திரம் கூறும் முறைக்கமைய பலவகை வடிவங்கள் அமைக்கப்படுகின்றன. மனிதன் கண்ட கலைகளில் சிற்பக்கலையானது ஒரு தனிச்சிறப்புடைய கலையாகும் சிறிய சிற்பமாயினும் காண்பவருக்கு மனதில் அமைதி, மகிழ்ச்சி, வியப்பு ஆகியவற்றை ஏற்ப்படுத்தினால் அது சிறந்த படைப்பாக கருதப்படும் சிற்பக்கலை சமயத்தடன் தொடர்பு கொண்டே வளர்ந்தது. வரலாற்றுக்கு மற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்த வருவது குறிப்பிடத்தக்கது. சிற்பங்களை விட மனிதனின் நாகரீகத்தையும் வளர்ச்சியையும் எடுத்தியம்பும் சான்றுகள் இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை வரலாற்றுச்சான்றுகளாக இவை விளங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்களின் அல்லது குறிப்பிட்ட காலத்தில் கூறகளை விளங்குவன சிறப்பம்சங்களே ஆகும். சிற்பங்கள் மக்களின் சமய நம்பிக்கைகளை வெளிப்படுத்தவதாகும் சிற்பங்கள் நினைவுச் சின்னங்களாகவும் விளங்குகின்றன.


சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.

சிற்பம் செய்யும் பொருட்கள்
மெழுகு, அரக்கு, சுதை, மரம், தந்தம், கல், பஞ்சலோகம் முதலியவைகளினால் சிற்ப உருவங்கள் அமைக்கப்படுகின்றன[1].
"கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை
பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன’’ (திவாகர நிகண்டு[2])

தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகள் 

அ. தட்சிணாமூர்த்தி "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற நூலில் தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகளை விளக்கியிருக்கின்றார். அதற்காக மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார். "நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன." மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார். "நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்."

No comments:

Post a Comment